முகப்பு
தென்மொழி இணையம்
தற்பொழுது நம் தென்மொழி இணையம் சிறப்பான முறையில்
காட்சிப்படுத்தப்பெற்று இயங்கி வருகிறது.
தொடக்கக் காலம் முதல் தென்மொழி இதழ்வளர்ச்சி, கொள்கைப் பரப்பல்,
முன்னெடுத்த மாநாடுகளிலும் போராட்டங்களிலும் பங்காற்றியமை,
தளர்ச்சியில் தாங்கிநின்றமை எனப் பல வழிகளிலும் துணைநின்று
தமிழ்த்தூய்மைக்கு அரணாக இருந்தோரும் இருப்போரும் பலர்;
தந்நலம் கருதாத தமிழ்நலக் கருத்தினராகிய
அவர்களைப் போற்றி மகிழும் வண்ணம்
தனித்தமிழுக்கு அரணாகிய அன்பர்கள் என்னும் பகுதி ஒன்று
நம் இணையத்தில் இடம்பெறுகிறது.