Category Archives: Thalal

வை.கோ ஐயா, அவர் குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கல்கள்!

DMDK-Leader-Vaiko-mother-Passedaway

தமிழினத்திற்காக, தமிழினச் சிக்கலுக்காகத் தொடர்ந்து போராடும் ஒரு அரசியல் மறவரை, தமிழினத்திற்கு — உண்மைத் தமிழருக்கு எந்தச்சிக்கல் வரினும்,குறிப்பாக பாவலரேறு ஐயா அவர்களின் பெயர்த்தியும் – அவரின் மகள் திரு.இறை.பொற்கொடி – திரு. இறைக்குருவனாரின் மகள் வழக்கறிஞர் திரு. அங்கயற்கண்ணிக்கு இலங்கையில் சிக்கல் நேர்ந்ததும் முதலில் இந்தியத் தலைமையமைச்சருக்குத் தொடர்பு கொண்டும், அவரை நேரில் சென்று பார்த்து சிக்கலைத் தீர்த்தவருமான மதிப்பிற்குரிய வை. கோ அவர்களை ஈன்ற பெண்ணியப் போராளி, மது ஒழிப்பிற்கு தொடர்ந்து குரல் கொடுத்த மூத்த கொள்கையாளர் மாரியம்மையார் அவர்கட்கு எந்தழலின் – என்னின் வீர வணக்கங்கள்! வை.கோ ஐயா, அவர் குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கல்கள்!